காற்றோ மழையோ, இரவோ பகலோ சென்னையில் எங்காவது சாலையில் கேட்பாரற்று, சுயநினைவில்லாமல், பசியோடோ, பட்டினியாகவோ, நோய்வாய்பட்டு யாராவது இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் திரு. வெங்கடேஷ் அவர்களை.
மிகமிகச் சாதாரண குடும்பத்தை சார்ந்தவர். 48 வயதாகும் இவர்மூலமாக இதுவரை சட்டபூர்வமாக மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1800க்கும் மேல். சென்னை மாநகர காவலின் Help Line மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் உதவியால் இச்சாதனையை செய்துள்ளார்.
விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் தனது மகன் 'நீச்சல்' வீரராகவும், சமூக சேவையின் மீதுள்ள திருப்தியால் தனது மகள் 'சமூக சேவகி' யாகவும் உருவாகி வருவதில் எல்லையற்ற ஆனந்தம்.
இதுவரை 25 முறைக்கு மேல் ரத்ததானம் செய்தும், தன் மனைவியின் சம்மதத்துடன் நால்வரும் கண்தானம் செய்ய பதிவு செய்துள்ளார். 2004-ம் ஆண்டே தனது உடலை தான் இறந்த பிறகு தானமாக வழங்க சட்டபூர்வமாக தன குடும்பத்தார் சம்மதத்துடன் பதிவு செய்துள்ளார்.
காலஞ்சென்ற தன தாயாரின் கண்களை தானம் செய்து, புதிதாய் இருவருக்கு வெளிச்சம் கிடைக்க உதவி இருக்கிறார். தன வாழ்நாளின் லட்சியமாக தன் தாயின் நினைவாக இலவசமாக 'முதியோர் இல்லம்' ஒன்று அமைப்பதை குறிகோளாக கொண்டுள்ளார்.
எவ்விதமான கைமாறும் எதிர்பாராமல் செய்யும் இவரது சேவைக்கு சிரம் தாழ்ந்த நல்வாழ்த்துக்கள்!
உண்மையான இவரது சேவை தொடரட்டும்!
பல்லாண்டு வாழ்க - நீ
பார் போற்றும் மாமனிதனாக!
கடந்த 2009-ல் திரு S.M. வெங்கடேஷ் பற்றி ஒரு பதிவுலக நண்பர் தனது 'பார்வைகள்' வலைப்பூவில் எழுதிய கட்டுரை இங்கு மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவன் கோவில் மணியோசை..இன்று தீபாவளி! நரகாசுரனை அழித்து மக்கள் வாழ்வில்
நல்லொளி பரப்பிய நாள். அசுரன் அழிந்தானோ இல்லையோ
நரகம் மட்டும் சிலருக்கு வாழ்க்கையாய்
அமைந்துவிடுகிறது. எத்தனை விதமான நரகங்கள்? வேண்டாச்
சிசுவாய், உழைக்க வழியின்றி ஊனமாய்,சுமையாய்
முதியோர் இல்லத்திலென்று எத்தனை எத்தனை.
இவர்களையெல்லாம் எதோ ஒரு விதத்தில் காப்பாற்றி
வாழவைக்க மனிதர்களும் அமைப்புக்களும் இருக்கின்றன.
வாழ்க்கைப் புயலில் எதிர்நீச்சலிட்டுக் களைத்து கை
சோர்ந்து நினைவு தொலைத்த ஜீவன்கள் தெருவோரம்
மயங்கியிருக்கிறார்களா, மரித்திருக்கிறார்களா என்றே
தெரியாமல் ஈமூடி, நாய் குதறி, மேலாடையின்றி கிடக்க
மூக்கைப் பொத்தியபடி நாம் கடந்து போன ஜீவன்கள்
ஒன்றாவது இருக்கும் நம் வாழ்வில்.
ஓரிருவரை இப்படிக் கரை சேர்த்தாலே பெரிய விஷயம். ஒற்றை மனிதனாய் ஒன்றிரண்டல்ல ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களை தேடித் தேடி காப்பாற்றிய இவர் பெயர் வெங்கடேஷ்.
|
Rescue videos section may inspire and give idea in rescuing actions. More..
The service was honored by many Governmental and NGOs. More..
Our mission includes NGOs and individuals to service the society. More..
Manuals and writeups on emergency supports to kids, adults and elders. More..
Serving at our maxium to make our society safe & secure.Still we need..More..
To rescue an individual from roadside or from public places, the team requires cleaning kid, first-aid materials, cloth, stretchers/wheel chairs for mobility, transport and man power to handle patients.
Now generation has changed, many are coming forward to suppor the society whole heartedly. to support our mission by any kind, please feel free to contact 9380185561.
Bank Account Details:
A/c Name: AGAL Foundation Public Charitable Trust
Bank: State Bank of India (SBI), Thiruvanmiyur Branch
A/C No.: 40142964170
IFSC: SBIN0001985